FWC

வட மாகாணத்தில் கல்வி வளர்ச்சி

வட மாகாணம் கல்வியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நவீன மயப்படுத்தப்படாததும் பொது ஏற்பாடாக அமைந்ததுமான கல்வியை மாத்திரம் வட மாகாண மாணவர் பெற்றனர். மத்திய அரசின் மாகாணங்களுடனான தொடர்பாடல் கல்வி வசதி பின்தள்ளப்படடமைக்கு ஒரு காரணம் எனலாம். இன்று சிங்கள மொழி மூலமே ஏராளமான சிறந்த பிரயோசனமான புத்தகங்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. அதன் தமிழ் வடிவப் புத்தகங்கள் இல்லை. தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மாணவர்களோடு ஒப்பிடுகையில் இது பெரும் பின்னடைவே. வடக்குப் பகுதிக்கான கற்றல் கற்பித்தல் உள்ளீடுகள் குறைந்தவையாகவே காணப்படுகின்றன. ஆசிரிய நியமனம் ஆசிரிய பயிற்சி முழுமையாகவோ,  தொடர்ச்சியாகவோ நியமனங்களின்படியே வடக்கில் செயற்படுத்தப்படுவதில்லை.

இதனால் பலவீனமான ஆசிரியர்களும்,  பலவீனமான கற்பித்தலும் வடக்கின் பாடசாலைகளில் பரவலாயிற்று. வடக்கு யுத்தம், அரசியல் அமைதியின்மை காரணமாக சில பாடசாலைகள் பலவீனமடைந்தன. மாணவர் கற்றலுக்கான பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாக இயங்க வேண்டியிருந்தது.  இவை காலப்போக்கில் விரிசல்களை உருவாக்கி விட்டன.

யுத்தம் மட்டுமன்றி சுனாமியில் பாதிக்கப்பட்டு எத்தனையோ பிள்ளைகள் பெற்றோர் இன்றி வாழ்கின்றனர்.  இதுவும் பாடசாலைக் கல்வியை மோசமாக பாதித்து விட்டது.  ஆசிரியர்களின் பரம்பலின்றி மேற்கு மாகாணம் முன்னணி வகிக்கிறது.  வட மாகாணம் குறைந்த ஆசிரியர் தொகை கொண்டதாக விளங்குகிறது.  9 ஆவது நிலையில்தான் இது காணப்படுகிறது.

எதிர்கால கவனக் குவிப்புக்குரியன :

ஆற்றலை எமது பிரதேசங்களில் வளர்த்தல்,  அதனை தக்கவைத்தல், பிரதேச வளர்ச்சிக்கான முதலீடாக மாற்றியமைத்தல் என்பவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.  இதே போல் பாடசாலை தொடங்கும்,  முடியும் நேரம் தொடர்பாகவும் பொருத்தமான மாற்றங்களைத் தேவை கருதி மேற்கொள்ளும் சுதந்திரம் கோட்டங்கள்,  பாடசாலைக்கு தரப்பட வேண்டும்.  கற்பித்தல் மணித்தியாலம்,  வேலை, தரம், நியமம் பாதிக்கப்படாதவாறு இதைச் செய்வதில் இழப்பு எதுவுமில்லை.

பாடசாலைகள் தான் எமது கல்விச் செழுமையின் மைய சக்தியாக விளங்க முடியும்.  கட்டாயம் அவ்வாறு விளங்க வேண்டும்.  அரசிடம் எதிர்பாத்தல் என்பதிலிருந்து விலகி சிந்திக்கவும் செயற்படவும் பாடசாலை அதிபர்கள் தயாராகுதல் வேண்டும்.  முகாமையாளர்களாக அல்லாமல் கல்வித் தலைவர்களாக உங்களை வாளர்த்தெடுங்கள் நல்ல தலைவர்கள் இல்லாமல் பாடசாலைகள் வளர முடியாது.  நல்ல பாடசாலைகள் இல்லாமல் தலைவர்கள் உருவாக முடியாது.

வடக்கின் வளர்ச்சி கல்வியூடாக வரும்போது அறிவுசார் பொருளாதார மையமாக எமது பிரதேசம் நிச்சயம் வளர்ச்சி பெறும். அதிபர் நம்பிக்கையும் தெளிவான தொலைநோக்கும் கொண்டு எமது பாடசாலைகளினதும் பெறுபேறுகளினதும் வளர்ச்சியின் முகவர்களாக வளர்த்தெடுப்போம்.

சிந்தனையாளர்கள், பொறுப்புதாரர்கள்,  திட்டமிடுவோர் கொண்ட சிறு அமைப்பு உருவாக்கப்பட்டு வடமாகாண கல்வி தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வது விரும்பத்தக்கது.  இது முறைமைசார் நிர்வாக அலகாக அன்றி சுதந்திரமான அபிவிருத்திச் சிந்தனைக்குரிய அமைப்பாக இருத்தல் வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சில பரிசீலனைகள் மேற்கொண்டு முன்மொழிவுகளை வழங்க முடியும்.

பாடசாலை வேலைகளை தனியார் கல்வி நிறுவங்கள் இரட்டிக்கின்றன. மாணவர்கள்,  பெற்றோர், பாடசாலை நிகழ்ச்சித் திட்ட்ங்களின் விளைத்திறன் என்பன தொடர்பான உத்தம நிலையை பேணுவதற்கு இரு சமந்தர கல்வி வழங்குனரிடையிலான சமரச நிகழ்ச்சித் திட்டங்கள் தேவை.

கல்வி வளர்ச்சி கருதி தனித்தன்மையுடன் பாடசாலை நாட்களையும் தவணைகளையும் மாற்றியமைக்கும் சுதந்திரம் வட மாகாண கல்வி அமைச்சுக்கு வேண்டும்.

Leave a Comment