FWC

பரீட்சை வெற்றிக்கு பங்களிக்கும் யோகா

புலமைப் பரிசில், கா.பொ.த (சா/த), க.பொ.த (உ.த) பரீட்சைகளில் ஆண்டுதோறும் அதிக மாணவர்கள் தோன்றுகின்றனர். தவணைப் பரீட்சைகளில் முதல் இடத்தைப் பெற்றவர்கள் கூட சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றை பெறத் தவறிவிடுகின்றனர். இதனை ஆசிரியர்களோ, பெற்றோரோ ஆராய்வதில்லை.

பரீட்சை நெருங்கும்போது அவர்களுக்கு பரீட்சைப் பீதி(Exam Phobia) ஏற்படுகின்றது. வினாக்களுக்கு விடை நன்கு தெரிந்தும் இப்பிதீ காரணமாக மறந்துபோய் விடுவர். இது உடல், உள நோய்களை(Psychosomatic Diseases) ஏற்படுத்தும். இவ்வாறான நோய்களுக்கு ஆங்கில மருந்து பயனளிக்காது. யோகா மட்டுமே உதவி செய்யும்.

மாணவர்களை நாளடைவில் பாதிக்கும் இக்கோளாறு Attention Deficit Hyperactivity எனப் பரிமாணமடையும். 12% மாணவர்களுக்கு இது இருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. சூழல் மாசு அடைந்தமை, ஆரோக்கியமற்ற துரித உணவு (Fast Food), போத்தலில் அடைத்த மென்பானங்களை விரும்பி உட்கொள்ளல், நீண்ட நேரத் தொலைக்காட்சி கணனி பாவனை, கையடக்க தொலைபேசி பாவனை, உடற்பயிற்சியின்மை, உறக்கமின்மை, போதிய ஓய்வின்மை, தனிப்பட்ட வகுப்புக்களுக்கு குதிரைப் பந்தயத்தில் ஓடுதல் போன்றவை காரணமாக மாணவர்கள் மன உளைச்சலை அடைகின்றனர். பாடசாலை மாணவர்களில் 16% ஆனோர்மனநலக் கோளறால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில மாணவர்கள் புகைத்தல், மது மற்றும் போதைவஸ்து பாவனைக்கு அடிமையாகியுள்ளனர். பணத்திற்காக களவு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவற்றை பத்திரிகை செய்திகளில் காண்கிறோம்.

பரீட்சை பீதியை உள வள ஆலோசனை(Counselling) உளவியல் சிகிச்சை(Psycho Therapy) போன்றவை மூலம் ஓரளவு குறைக்க முடியும். இதனை வேரோடு அறுத்துக் குணப்படுத்தும் ஒரேயொரு மருந்து யோகாவாகும்.

யோகா மாணவர்கள் பதற்றம், பயம் இன்றி தைரியமாக பரீட்சையை எழுதி சிறந்த பெறுபேற்றை பெற உதவும் என்றால் மிகையாகாது. சில யோகா ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி இதற்கு உதவும்.

மன அழுத்த நோயினால்(Depression) பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு  இது சிறந்த மருந்தாகும். மருத்துவமனையில் கொடுக்கப்படும் Anti – depressants மருந்துக்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, பாடசாலைகளில் யோகாவை ஒரு பாடமாகப் போதிப்பது பொது பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றை பெறுவதற்கு உதவும்.

சவாசனம், பிராணாயாமம் – சீத்தளி, கீத்காரி, ஸதந்தா போன்றவை மாணவர்களுக்கு மிகுந்த பலனைக் கொடுக்கும்.சூரிய நமஸ்காரம் மாணவர்களுக்கு அபரிதமான பலன்களைக் கொடுக்கும். தனுராசனமும் விபரீத கரணி ஆசனமும் மாணவர்கள் கடமை தவறாது செயலாற்ற தூண்டும். விரிக்காசனம், கருடாசனம் போன்றன மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும். சிறுவர்கள் புத்திளமைப் பருவத்தில்(Adolescence) சோம்பல் மிகுந்து காணப்படுவதுடன் சிலர் திசைமாறிக் கெட்ட வழியில் போவர். இவர்களின் மந்த கதியை அகற்றி சுறுசுறுப்பான, நற்பிரசைகளாக உருவாக்க ஜானுசீராசனம், பஸ்ஸிமோத்தாசனம், பத்மாசனம் போன்ற ஆசனங்கள் பேருதவி செய்யும்.

மாணவர்கள் கிரகமாக யோகாவில் ஈடுபட்டால் உடல், உள உறுதி(Stamina) மேலோங்கும். சோர்வின்றி நீண்ட நேரம் படிக்க உதவும்.

எனவே பாடசாலை நேரசூசியில் யோகா பயில்வதற்கு ஒதுக்கினால் மாணவர்கள் புத்துணர்ச்சி பெற்று சகல பாடங்களையும் கவனிக்கும் திறன், சக்தி அதிகரிக்கும். இந்தியா மலேசியா போன்ற நாடுகளில்  பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் ஒரு பாடமாக யோக போதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளல் விரும்பத்தக்கது.

Leave a Comment