FWC

சிறந்த பெறுபேற்றுக்கு ஆயுர்வேதத்தின் பங்களிப்பு

சில மாணவர்கள் சிறந்த புத்திசாலிகளாக இருந்தாலும் படிப்பில் நாட்டமின்றி இருப்பர். இதுவும் கல்வி பெறுபேற்று வீழ்ச்சிக்கு ஒரு காரணி எனலாம். இவர்களுக்கு ஆயுர்வேதத்தில் சிகிச்சை உண்டு.

அறிவு, நுண்ணறிவு, ஊக்கம் அளித்து பாடங்களில் சிறப்புப் பெறுவதற்கு ஸாதகம் என்றொரு பித்தம் இதயத்தை தங்குமிடமாகக் கொண்டு செயற்படுகின்றது. இந்த ஸாதக பித்தத்தை ஊக்குவிப்பதற்கு வயிற்றிலுள்ள பாசகம் என்ற உணவை செரிக்கச் செய்யும் பித்தத்தின் நேரடி உதவி தேவை. இந்த பாசக ஸாதக பித்த தொடர்பு சிறப்பாக இருக்குமிடத்து மாணவர்கள் படிப்பில் நாட்டம் காட்டி சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்துவர். நல்ல நினைவாற்றலுக்குக் கூட பின்வருமாறு செய்யலாம் :

காலையில் வெதுவெதுப்பான புழுங்கலரிசியைச் சோற்றுடன் பயற்றம் பருப்பு அதிகமாகவும், துவரம் பருப்பு குறைவாகவும் மஞ்சள் தூளுடன் வேக வைத்த பருப்பை கலந்து சாப்பிடச் செய்யவும். அவ்வாறு சாப்பிடும் போது மூலிகை மருந்தாகிய சாரஸ்வதக்ருதம் எனும் நெய் மருந்து ஒரு தேக்கரண்டி எடுத்து அரைத் தேக்கரண்டி சாரஸ்வத சூரணத்துடன் குழைத்து கால் கரண்டி சுத்தமான தேனும் விட்டு கலந்து உணவிற்கு நடுவே சாப்பிடும்படி உபதேசிக்கவும்.

தலைக்கு மூலிகைத் தைலமாகிய ப்ரம்மீ தைலத்தை கிழமைக்கு இரு தடவை காலையில் தேய்த்து பின் முழுகுவதால் படிப்பில் நல்ல நாட்டம், நினைவுத்திறன் மேம்படும். அன்று முழுவதும் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்ட விடயங்களை வரிசைப்படுத்திக் கூறச் செய்வதால் புத்தி, நினைவாற்றல் மேன்படும்.

சாரஸ்வதாரிஷ்டம் எனும் மருந்தை காலை, இரவு உணவின் பின் சாப்பிடக் கொடுக்கவும். இரவில் நீண்ட நேரம் கண் விழித்துப் படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால் இரவு உணவுவாக பச்சைப் பயறு வேக வைத்த கறியுடன் எண்ணெய் சேர்க்காத கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியினை சாப்பிடக் கொடுக்கலாம். இதனுடன் ஓரிரண்டு தேக்கரண்டி கல்யாணக க்ருதம் எனும் ஆயுள்வேத மருந்தையும் சேர்த்துக் கொண்டால் மன வலிமை, உடல் வலிமை நன்கு கூடி பாடத்தை நன்கு உள்வாங்கும் தன்மையும் வளரும்.

Leave a Comment